Search

Oct 11, 2025

உலகம்

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் தீவிரம்: ட்ரம்ப் அதிரடி வரி உயர்வு!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% கூடுதலாக வரி விதிக்கப்படுவதாக இன்று (11) அறிவித்துள்ளார்.

இது நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும். இதன் மூலம், சீன பொருட்களுக்கு அமுலிலிருந்த 30% வரி, மொத்தம் 130% ஆக உயர்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இருநாடுகளும் வர்த்தக போரைத் தவிர்க்க 90 நாட்கள் வரி நிறுத்த ஒப்பந்தம் செய்தன. கால அவகாசம் நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும், அக்டோபர் 30 நடைபெறவிருந்த ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா - சீனா உறவில் மேலும் பதற்றம் ஏற்படலாம் என சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All