Search

Aug 14, 2025

உலகம்

ஐரோப்பிய தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பிற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணொளி மூலமாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், நேட்டோ தலைவர் மார்க் ருட்டே, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பின்லாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் மோதலில் போர் நிறுத்தம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை (15) அலாஸ்காவில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All