Search

Aug 13, 2025

உலகம்

அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் - தீர்க்கப்படுமா வர்த்தக பிரச்சினைகள்?

இந்தியபிரதமர் செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயோர்க்கில் செப்டம்பர் மாதம் ஐ.நா பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வகையில் பயண ஏற்பாடுகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதே தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது, இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள், வரிகள் விதித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது அனைத்து பிரச்சினைகள் குறித்து பொதுவான ஒரு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All