Search

Oct 17, 2025

உலகம்

ட்ரம்ப் பின் கருத்திற்கு இந்தியா பதிலடி !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

- இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில்,

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் நுகர்வோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கொள்கை.

எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதி செய்தல், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவை மாறுபடலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All