Search

Sep 4, 2025

உலகம்

நைஜீரியாவில் படகு விபத்து: 60 பேர் உயிரிழப்பு.

நைஜீரியாவின் வடமத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நீரில் மூழ்கிய மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 100க்கும் மேற்பட்டோர் குறித்த படகில் பயணித்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில், பத்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All