Search

Aug 14, 2025

உலகம்

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை !!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ரஷ்யா – அமெரிக்க ஜனாதிபதிகள் இருவரும் நாளை (15) சந்தித்து பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில், நாளைய சந்திப்புக்குப்பின் உக்ரைன் போரை புட்டின் தொடர்ந்து நடத்தினால், ரஷ்யாவுக்கு மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் காணொளி மூலம் நடத்திய ஆலோசனையில், அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்க - ரஷ்யா மாநாட்டின்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்கா விரும்புகிறது. என்பதை தெளிவாக ட்ரம்ப் கூறியதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All