Search

Sep 13, 2025

உலகம்

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” - விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் இன்று தொடக்கம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (13 செப்டம்பர்) திருச்சியில் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறார். இந்தப் பயணத்தின் தொடக்க நிகழ்வு காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை இடத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தப் பயணத்துக்காக த.வெ.க. வெளியிட்டுள்ள இலச்சினை மற்றும் விளம்பர பேருந்து பெரும் கவனத்தை பெற்றுள்ளது. பேருந்தில் அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய் இடையே காட்சியளிக்கும் படம் இடம்பெற்றுள்ளது. இந்த பேருந்து நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

- தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள அறிக்கையில்,

"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்"

என்றார். மேலும், "மக்களிடம் செல்" என்ற அண்ணாவின் வார்த்தைகளை மனத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் விஜய், திருச்சி பயணத்தை முடித்த பின் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All