Search

Aug 16, 2025

உள்ளூர்

வதந்திகளை பரப்பாதீர்கள் - எதிர்க் கட்சிகளை தாக்கிய பிரதமர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியை பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது,

நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது. எனத் தெரிவித்துள்ளார்.

- இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறுகையில்,

பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை.

ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனையும் இதுவரை பிரயோகிக்கவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன, குறிப்பாக அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.

உண்மை நிலைமைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு.

என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All