SEGU
Oct 21, 2025
உள்ளூர்
AI அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்ற செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு அண்மையில் (17) ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் நினைவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பிலான இந்த செயலமர்வு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் தென் மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப கட்ட முன்னெடுப்பாக அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தல் மற்றும் தயார்படுத்துதல், அரச சேவையில் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான மனப்பாங்கை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இங்கு முக்கிய உரை நிகழ்த்தினார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் செயலணி உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தென் மாகாண பிரதம செயலாளர் சட்டத்தரணி சுமித் அலஹகோன், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








