Search

Rebecca

Mar 2, 2026

உள்ளூர்

மீண்டும் அவசரகாலச் சட்டம்? அரசாங்கம் தீவிர கவனம்!

மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கேள்வி: பெப்ரவரி 28ஆம் திகதிக்குப் பின்னர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவில்லை. அதனுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா?

நளிந்த ஜயதிஸ்ஸ: நிச்சயமாக.

கேள்வி: திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையா? அது எப்போது?

நளிந்த ஜயதிஸ்ஸ: அது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவே உத்தேசித்துள்ளோம்.

'டித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைத் தொடர்ந்தே நாட்டில் மக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த அவசரகால நிலை கடந்த 28ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், அது மேலும் நீடிக்கப்படவில்லை. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் தற்போது அநாவசியமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All