Search

Aug 14, 2025

உள்ளூர்

புதிய பொலிஸ்மா அதிபர் - கடமைகளை பொறுப்பேற்றார். #video

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- இந் நிகழ்வில் கருத்து வௌியிட்ட பொலிஸ்மா அதிபர்,

தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பொலிஸ்மா அதிபராக தன்னை நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All