SEGU
Sep 15, 2025
உலகம்
உக்ரைனிய உளவுத்துறையின் செயலால் ரஷ்ய கடும் கோபத்தில்
உக்ரைனிய உளவுத்துறையின் செயலால் ரஷ்ய கடும் கோபத்தில்
உக்ரைனிய இராணுவ உளவுத்துறையின் ஒரு வட்டாரம், ரஷ்யாவின் ஆயுதங்களை ஏற்றிச்சொன்ற தொடருந்து மீதான இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததை உறுதிப்படுத்தியள்ளது. இதில் மூன்று ரஷ்ய தேசிய படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு ரஷ்யாவின் மேற்கு ஓரியோல் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் ஒரு பகுதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
மற்றொரு தாக்குதலில், டேங்கர் வண்டிகள் "அவற்றின் எரிபொருளுடன் அழிக்கப்பட்டன" என்று உக்ரைனின் GUR இராணுவ உளவுத்துறை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் ரஷ்யப் படைகளுக்கான விநியோக வழிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனிய GRU வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் தொடருந்து உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதன் விளைவாக, ரஷ்யர்கள் குறிப்பிடத்தக்க தளவாட சிக்கல்களை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பெர்ம் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையிலிருந்து 1,500 கி.மீ. தொலைவில் வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு இரசாயன தொழிற்சாலையின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் தரப்பு தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All