SEGU
Oct 10, 2025
Breaking
அமைச்சரவையில் இன்று மாற்றம்!
இன்று (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.
இதனடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களாக
பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு
அனுர கருணாதிலக்க - துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து
சுசில் ரணசிங்க - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,
கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம். முகமது முனீர் - மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
டாக்டர் முதித ஹன்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்
அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
யு.டி. நிஷாந்த ஜெயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
கலாநிதி கௌசல்யா அரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
ஈ.எம். ஐ. எம். அர்க்கம் - எரிசக்தி பிரதி அமைச்சர்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All