Jino
Oct 26, 2025
விளையாட்டு
கோஹ்லி - ரோஹித் அசத்தல் : அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா.
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தை வழங்கி தங்களது நட்சத்திர துடுப்பாட்டத்தை நிகழ்த்தினர்.
போட்டியின் ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
அவுஸ்திரேலியா அணி 236/10 (46.4 ஓவர்கள் நிறைவில் பெற்றது)
அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டம் - மற் றென்ஷோ 56 (58), மிற்செல் மாஷ் 41 (50), மத்தியூ ஷோர்ட் 30 (41), ட்ரெவிஸ் ஹெட் 29 (25) ஓட்டங்கள்.
இந்திய அணி பந்துவீச்சு - ஹர்ஷித் ரானா 4/39, வொஷிங்டன் சுந்தர் 2/44, அக்ஸர் பட்டேல் 1/18, மொஹமட் சிராஜ் 1/24, குல்தீப் யாதவ் 1/50)
பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணி துடுப்பாட்டம் - ரோஹித் சர்மா ஆ.இ 121 (125), விராட் கோலி ஆ.இ 74 (81) ஓட்டங்கள்.
போட்டியின் நாயகன் - ரோஹித் சர்மா.
தொடரின் நாயகன் - ரோஹித் சர்மா.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








