Jino
Sep 10, 2025
விளையாட்டு
ஆசிய கிண்ணம் - முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி.
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
- துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில்,
Sediqullah Atal ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன், Azmatullah Omarzai 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

- பந்து வீச்சில் ஹொங்கொங் அணி சார்பில் Ayush Shukla, Kinchit Shah தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
- துடுப்பாட்டத்தில் ஹொங்கொங் அணி சார்பில் Babar Hayat 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
- ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் Fazalhaq Farooqi, Gulbadin Naib தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All