Search

Jino

Sep 7, 2025

விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே.

இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கமில் மிசார மாத்திரம் 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

அதற்கமைய 81 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய சிம்பாப்வே அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி தொடரின் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp