Search

Sep 29, 2025

உள்ளூர்

ஜனாதிபதி அனுர - ஜப்பான் பிரதமர் சந்திப்பு.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க - ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவிற்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில், இலங்கை-ஜப்பான் இருநாட்டு ஒத்துழைப்பின் புதிய கட்டமாக, அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையின் மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜப்பான் தூதர் அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இவ்வழக்குகளை ஒப்புக்கொண்டனர்.

OSA திட்டத்தின் கீழ், 500 மில்லியன் யெனில் உருவாகும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும். இது பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும்.

மேலும், பால் உற்பத்தித் திறனை மேம்படுத்த 463 மில்லியன் யெனில் பல உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஆதரவு வசதிகள் வழங்கப்படவுள்ளன. இது சிறு பால் விவசாயிகளின் வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகும்.

இந்த இரு திட்டங்களும் ஜப்பான் - இலங்கை உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கற்களாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All