Search

Sep 3, 2025

உள்ளூர்

ஐ.தே.க 79வது ஆண்டு நிறைவு விழா - ஒத்திவைப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த நிலையில், விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- ஐ.தே.க பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவிக்கையில்,

நேற்று (02) கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவித்தார்.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை இந்த மாதம் வேறு ஒரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All