Search

Sep 7, 2025

உலகம்

சீனா அதிபரை சந்திக்கும் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகளவான வரியை அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ளார்.

இந்த சூழலில் இந்திய, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதனை அடுத்தே ட்ரம்ப் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்குடன் இருப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All