Oct 30, 2025
உள்ளூர்
யுவான் நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம்.
இலங்கை - சீனா இடையிலான வர்த்தகத்தை சீன யுவான் (RMB) நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் முக்கியமான கூட்டம் நேற்று (29) கொழும்பில் இடம்பெற்றது.
சீனத் தூதுவர் ஷி ஷெங் ஹொங், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வை, இலங்கை சீன வர்த்தகக் கவுன்சில் ஏற்பாடு செய்து, சீன வங்கியின் கொழும்பு கிளை ஆதரவு வழங்கியது.
இதுகுறித்து மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில்,
"சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சீனாவுடன் நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். RMB வசதி அப்போது நடைமுறையில் இருந்திருந்தால், அதனைப் பயன்படுத்தி இலங்கைக்கு பலனளிக்க முடிந்திருக்கும். RMB தற்போது உலகின் நான்காவது பெரிய சர்வதேச நாணயமாக உயர்ந்துள்ளது"
எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், BRICS அமைப்பு வலுப்பெறுவதன் மூலம் உள்நாட்டு நாணயங்களை வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில் சீனாவும் இலங்கையும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் அமெரிக்க டொலர் 4.3 பில்லியன் என உயர்ந்துள்ளதுடன், சீனா இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







