Search

Oct 16, 2025

உள்ளூர்

அதிக விலை குடிநீர் போத்தல்கள் - விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய வர்த்தகர்கள்.

நாட்டில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. ஏப்ரல் 1ஆம் திகதி - செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All