Search

Oct 9, 2025

உள்ளூர்

இன்று உலக தபால் தினம்.

151வது உலக தபால் தினம் இன்று (09) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

இந் நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

1874 ஆம் ஆண்டு அக்டோபர் 09 அன்று, பல நாடுகள் உலக தபால் ஒன்றியத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதன் நினைவாக, 1969 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலக தபால் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09 அன்று உலக தபால் தினத்தைக் கொண்டாடுகின்றன.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All