Search

Jino

Sep 2, 2025

உள்ளூர்

நாட்டில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்.

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய, இன்று (02) பிற்பகல் 12:10 மணிக்கு, ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp