Search

Oct 15, 2025

உள்ளூர்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3,42,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று (14) 3,65,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தி விலை, இன்று (15) 3,70,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All