Search

Sep 1, 2025

உள்ளூர்

அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி !

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்கான அடிக்கல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக தலைமையில் நாட்டப்பட்டது.

இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

மேலும், எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All