Search

Sep 25, 2025

உள்ளூர்

பௌத்த பிக்குகளின் உயிரை பறித்த மெல்சிறிபுர கேபிள் கார் விபத்து.

மெல்சிறிபுர - நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த பாரிய கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும் இந்திய பிக்கு ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது கேபிள் காரில் பயணித்த மொத்தம் 13 பிக்குகளில் இருவர் அதிலிருந்து குதித்து தப்பிய நிலையில், நான்கு பிக்குகள் படுகாயமடைந்தனர்.

மேலும், தற்போது காயமடைந்த ஆறு பிக்குகளும் குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All