Search

Oct 16, 2025

உள்ளூர்

குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் ! – அமைச்சர் இரா. சந்திரசேகர்.

பாதாள குழுக்கள், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி நாட்டிற்குள் இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

- கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,

“எந்த கொம்பனாக இருந்தாலும், உலகின் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை நாடு நேரில் காண்கிறது” என வலியுறுத்தினார்.

அவர் மேலும், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதாகவும்,தற்போது பாதுகாப்பு அமைப்புகள் முழுமையான சக்தியுடன் செயற்படுவதாகவும், போதைப்பொருள் மன்னர்கள் சிறையில் சிக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சீவ கொலை சந்தேகநபர்கள் வழக்கிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் தொடர்புடையவர்களும் சட்டத்தின் பிடியில் சிக்கப் போவதாகவும், மக்களின் சொத்துகளை சூறையாடியவர்களுக்கு இனி பாதுகாப்பில்லை என்றும்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All