Search

Oct 13, 2025

உள்ளூர்

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய - 78வது மாநாடு இன்று !

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய குழு அமர்வில், தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயேசஸ் மற்றும் பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், இவ் அமர்வில், 8 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று, எதிர்வரும் ஆண்டுகளுக்கான சுகாதார திட்டங்கள், புகையிலை ஒழிப்பு, முதன்மை சுகாதார சேவைகள், நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளனர்.

நாட்டின் அனைத்து மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், வழங்குதல், பாதுகாத்தல், மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை புதுப்பித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All