Search

Sep 8, 2025

உள்ளூர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு இன்று ஆரம்பம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று திங்கட்கிழமை இலங்கை நேரம் படி மதியம் 1.30 மணி ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் உரையாற்றுவார். இதன்போது, இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர், இலங்கை நேரம் பிற்பகல் 3.45 மணிக்கு இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து விவாதம் நடைபெறும்.

மேலும், பிரதிநிதிகளின் கருத்துக்களின் பின்னர், இலங்கை அரசின் நிலைப்பாடு - முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளிக்கவுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All