Search

Sep 9, 2025

உள்ளூர்

இலங்கை மின்சார கட்டணத்தில் திருத்தம் – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு.

இலங்கை மின்சார சபை (CEB), எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

முன்னர், கடந்த ஜூன் 12ஆம் திகதி, 15 வீதத்தால் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது, புதிய கட்டண திருத்தம் மீண்டும் அதிகரிப்பாக அமையும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்வாறு தொடர்ச்சியான கட்டண உயர்வுகள் பொதுமக்கள் மற்றும் வணிக உற்பத்தியாளர்களுக்கு பெரும் சுமையாக அமையும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All