Search

Aug 28, 2025

உள்ளூர்

இலங்கை போக்குவரத்து சபை பணிபகிஸ்கரிப்பு.

கொழும்பு - யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும். எனும் நடவடிக்கைக்கு எதிராக இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

தனியார் பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் செல்ல முற்பட்ட போதிலும் போதுமான பேருந்து வசதிகள் காணப்படாமையினால் பலர் தமது பயணத்தை இடைநிறுத்த வேண்டிய நிலைமையில் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All