Oct 31, 2025
விளையாட்டு
சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டியில் - இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம்.
பங்களாதேஷில் நடைபெற்ற CAVA Cup for Men 2025 சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்ற எம்.டி.எம். தஹீர் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை சமாதான தூதரும், மன்னார் மாவட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்தவரும், புத்தளம் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான முஹம்மது தஹீர், தனது சிறப்பான ஆட்டத் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “Best Player of the Match” விருதையும் வென்று தனிப்பட்ட சாதனையையும் புரிந்துள்ளார்.

எமது தாய் நாட்டின் பெயரை உயர்த்திய தஹீர் அவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கை மேலும் சிறக்க — எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஷேக் அமானி மேலும் தனது வாழ்த்துச் செயதியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சாதனைகளை மேலும் படைப்பதற்கான தைரியத்தையும் உடல் வலிமையையும் அவருக்கு இறைவன் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் மேலும் சுட்டிக்காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








