Jino
Sep 8, 2025
விளையாட்டு
தொடரை கைப்பற்றியது இலங்கை.
இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ஹராரேயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.
> துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில்,
- Tadiwanashe Marumani அதிகபட்சமாக 51 ஓட்டங்கள், அணித்தலைவர் Sikandar Raza 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
> பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dushan Hemantha 03 விக்கெட்டுக்கள், Dushmantha Chameera 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 192 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
> துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில்,
Kamil Mishara ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன், Kusal Perera ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All