Search

Sep 6, 2025

உள்ளூர்

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு.

நீர்கொழும்பில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,

நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All