Search

Oct 1, 2025

உள்ளூர்

நாட்டில் அதிகரிக்கும் வெப்ப நிலை.

நாட்டின் 8 மாவட்டங்களில் இன்றைய தினம் (01) வெப்பமான வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அவ்வாறு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும்.

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் இலேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் அதிகளவான நீரை அருந்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All