Search

Sep 9, 2025

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கம்: விவாதம் நாளை.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் தொடர்பாக நாளை (10) விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த விவாதமானது நாளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All