Search

Oct 11, 2025

உள்ளூர்

மலையக மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கும் - சிறப்பு நிகழ்வு.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் முக்கிய நிகழ்வு, நாளை அக்டோபர் 12 பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக, 2000 பயனாளிகளுக்கு இவ் வீட்டு உரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வசதியான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் செயல்படும் இந்த திட்டம், மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் குழு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All