Search

Aug 28, 2025

உள்ளூர்

30 திகதி போராட்டம் - குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தமது முழுமையான அதரவு இருக்கும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும். என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

- ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு விடயம். போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்கும். அத்துடன் போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும், நியாயமான போராட்டத்தை பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All