Search

Oct 15, 2025

உள்ளூர்

தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு.

நாட்டில் 2025 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 2025.04.01 முதல் மாதாந்த சம்பளம் ரூ.17,500 லிருந்து ரூ.27,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2026 ஜனவரி 1 முதல் ரூ.30,000 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் சம்பள அதிகரிப்பு, ஊழியர் நலன்களைப் பெருக்கும் வகையில், அனைத்து சட்டரீதியான கொடுப்பனவுகளிலும் (சேமலாப நிதி, மேலதிக நேரக் கொடுப்பனவு, மகப்பேற்றுக் கொடுப்பனவு உள்ளிட்டவை) நடைமுறைக்கு வரவேண்டும்.

மேலும், தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு விதிகளை செயல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All