Search

Oct 14, 2025

உள்ளூர்

பிரதமர் கலாநிதி ஹரிணி - தியானன்மென் சதுக்கத்தில் அஞ்சலி.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் தியானன்மென் சதுக்கத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு சீனாவின் தேசிய முக்கியத்துவம் மிக்க இரண்டு நினைவுச்சின்னங்களாகிய, மக்கள் நாயகர்களின் நினைவுச்சின்னம் (Monument to the People's Heroes) மற்றும் மாவோ சேதுங் நினைவுக் கூடம் (Mao Zedong Memorial Hall) ஆகியவற்றிற்கு அஞ்சலி செலுத்தினார்.

அங்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர், சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகத் தலைவரான அமரர் தலைவர் மாவோ சேதுங் மற்றும் தேசத்தின் புரட்சிகரப் போராட்டத்திற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த நாயகர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.

தியானன்மென் சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பேரவையின் மண்டபத்தில் (Great Hall of the People) இடம்பெற்ற சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்னர், சீன மக்கள் குடியரசின் சிரேஷ்ட தலைவர்களால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ பீஜிங் விஜயம், சீனாவின் வரலாற்று மரபுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு ஆகியவற்றின் மீது இலங்கை கொண்டிருக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All