Search

Sep 23, 2025

உள்ளூர்

ஜனாதிபதி அமெரிக்கா விஜயமானார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது நாளை புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All