Search

Rebecca

Sep 8, 2025

உள்ளூர்

நிமல் லான்சாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணையில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All