Search

Oct 8, 2025

உள்ளூர்

பொலிஸ் அதிகாரி ஜஸ் போதைப் பொருளுடன் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

592 வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை குறிந்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதை பொருளுடன் இருந்த வேளை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி தனது உடமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபர்மீது  பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல  குற்றாச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த அதிகாரி  வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு  இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் .

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் முகமாக குறித்த நபர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All