Search

Oct 24, 2025

உள்ளூர்

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் - மரக்கறி சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம். #Video

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்று (24) காலை 8:30மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.

ஆனாலும் புதிய சந்தைக் கட்டடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்கு வரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொது மக்கள் சந்தையை நாடுவது குறைவு ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர்.

வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனாலும் இது வரை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத விடத்து மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp