Search

Sep 20, 2025

உள்ளூர்

நாட்டில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள்.

இலங்கையில் 2025ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் மற்றும் 375 பெண்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுபோன்ற இழிவான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இது தொடர்பான சம்பவங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எமது ஊடகம் சார்பாக நாம் கேட்டுக்கொள்கின்றோம்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All