Search

Oct 27, 2025

உள்ளூர்

பெருமளவான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நேற்று (26) பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உடைமையில் 196 கிலோ 218 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொம்பே பகுதியில் வசிக்கும் 44 வயதானவர் எனவும், இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் பைலட் சார்ஜெண்டாக பணியாற்றி 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், நீதிமன்றங்களில் இருந்து தலைமறைவாகி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான செம்புக்குட்டி ஆராச்சிகே டிலான் தனுஷ்க லக்மாலின் மைத்துனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp