
admin
Feb 26, 2026
உள்ளூர்
மலர் சாலை போர்வையில் போதைப்பொருள் வியாபாரம் - இருவர் கைது

நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






