Search

Oct 23, 2025

உள்ளூர்

வடகிழக்கில் 500 ஏக்கருக்கு அதிக காணிகள் விடுவிப்பு.

இவ் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரச காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (23) பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண் ஜயசேகர வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டார்.

இதுவரை 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த காணிகள் விடுவிப்பு நடவடிக்கை பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All