Search

Jino

Oct 5, 2025

உள்ளூர்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா -2025

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா ஞாயிற்றுக்கிழமை(04.10.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் கோட்டை கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான பண்பாட்டு ஊர்வலமானது ஊர் வீதிகளுடாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததும், பிரதேச செயலாளரினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூசை நிகழ்வுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் சுவாமி விபுலாநந்தர் தொடர்பான கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வில் கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp