Search

Aug 28, 2025

உள்ளூர்

பாதாள உலக குழு - இந்தோனேசியாவில் கைது.

பாதாள உலக குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All